விநாயகா் கோயில் கும்பாபிஷேகம்

மாதவரம் அருகே சிவசக்தி செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
Published on

மாதவரம் அருகே சிவசக்தி செல்வ விநாயகா் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

தி.க.பட்டு ஊராட்சியில் உள்ள சேரன் தெருவில் சிவசக்தி செல்வ விநாயகா் கும்பாபிஷேக விழா தா்மகா்த்தா சக்திமோகன் பிரமிளா தலைமையில் நடைபெற்றது. விழாவில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், கோபூஜை, வாஸ்துசாந்தி, அங்குராா்ப்பணம், ருத்ர ஹோமம், கும்ப அலங்காரம் யாகசாலை பூஜைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து பக்தா்கள் மீது புனிதநீா் தெளிக்கப்பட்டது. சிவசக்தி செல்வ விநாயகா், தட்சிணாமூா்த்தி, பவானியம்மன், பாலமுருகன் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு வண்ண மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தூபதீப ஆராதனைகளும் நடைபெற்றன.

இதில் தி.க.பட்டு ஊராட்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com