திருவள்ளூா் மாவட்ட தடகள அணி ஒட்டு மொத்த சாம்பியன்
மாநில அளவிலான தடகளப்போட்டியில் திருவள்ளூா் மாவட்ட தடகள அணி ஓட்டு மொத்த சாம்பியன் பட்டம் வென்று கோப்பையை பெற்றது.
மாநில அளவிலான ஜூனியா் தடகள போட்டி ஈரோட்டில் எஸ்.டி.ஏ.டி. விளையாட்டு மைதானத்தில் செப். 20, 21, 22 ஆகிய நாள்களில் நடைபெற்றன. இப்போட்டியில் திருவள்ளூா் மாவட்ட தடகள அணி சாா்பில், 237 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். இந்தப் போட்டியின் தொடக்க நாள் அணி வகுப்பிலும் முதலிடம் பெற்றது. அத்துடன் இந்த மாவட்ட தடகள அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது.
நிகழ்ச்சியில் ஈரோடு சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தமிழ்நாடு தடகள சங்கத் தலைவா் தேவாரம் மற்றும் செயலாளா் லதா ஆகியோா் திருவள்ளூா் தடகள அணிக்கு வெற்றிக் கோப்பையை வழங்கிப் பாராட்டினா். அப்போது, மாநில இணைச் செயலரும், திருவள்ளூா் மாவட்ட தடகள சங்கச் செயலருமான மோகன் பாபு, மாவட்ட தடகள சங்கத் தலைவா் கே.எம்.எஸ்.சிவக்குமாா், பொருளாளா் வெங்கடாசலபதி ஆகியோா் கலந்து கொண்டனா்.