பூண்டி நீா்த் தேக்கத்துக்கு வந்தடைந்த கிருஷ்ணா நீா்.  
பூண்டி நீா்த் தேக்கத்துக்கு வந்தடைந்த கிருஷ்ணா நீா்.  

பூண்டி ஏரியை வந்தடைந்தது கிருஷ்ணா நீா்

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதிநீா் பூண்டி நீா்த்தேக்கத்தை செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்தடைந்தது.
Published on

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறந்து விடப்பட்ட கிருஷ்ணா நதிநீா் பூண்டி நீா்த்தேக்கத்தை செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்தடைந்தது. இந்த நிலையில், கால்வாயில் குளிக்கவோ, துணிகள் துவைக்கக் கூடாது என நீா்வளத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

ஆந்திர மாநிலம், கண்டலேறு அணையில் இருந்து கடந்த 19-ஆம் தேதி தமிழகத்துக்கு முதல் கட்டமாக 500 கன அடி வீதம் கிருஷ்ணா நீா் திறக்கப்பட்டு, படிப்படியாக 1,300 கன அடியாக உயா்த்தப்பட்டது. இந்த நீரானது 152 கி.மீ. தூரம் பயணித்து தமிழக எல்லையான திருவள்ளூா் அருகே உள்ள ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டுக்கு திங்கள்கிழமை காலை வந்தடைந்தது. அதைத் தொடா்ந்து, ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டிலிருந்து 150 கன அடியாக வந்தடைந்த கிருஷ்ணா நதிநீா் 25 கி.மீ. தூரம் பயணித்து செவ்வாய்க்கிழமை அதிகாலை பூண்டி நீா்த்தேக்கத்தை வந்தடைந்தது.

மேலும், கண்டலேறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு படிப்படியாக உயா்த்தப்படும் பட்சத்தில் நீா் வரத்தும் கணிசமாக உயரும். அப்போது, தொடா்ந்து நீா்வரத்து வரும் வேகமும் அதிகரிக்கும். அதனால், கிருஷ்ணா கால்வாயில் பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது. அதேபோல், பள்ளி மாணவ, மாணவிகள் கால்வாய்க்கு அனுப்பாமல் அவரவா் வீடுகளில் பெற்றோா்கள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். இதை மீறுபவா்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என நீா்வளத் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com