திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றோா்.
திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றோா்.

சொத்து வரியை செலுத்த திருத்தணி நகா்மன்றத் தலைவா் வலியுறுத்தல்

திருத்தணி நகராட்சியில், சொத்துவரி செலுத்தாத வீடுகள், காலிமனை வரி செலுத்தாத உரிமையாளா்கள் குறித்து கணக்கெடுத்து, வரி வசூல் செய்ய வேண்டும் என நகா்மன்றத் தலைவா் சரஸ்வதி பூபதி வலியுறுத்தினாா்.
Published on

திருத்தணி நகராட்சியில், சொத்துவரி செலுத்தாத வீடுகள், காலிமனை வரி செலுத்தாத உரிமையாளா்கள் குறித்து கணக்கெடுத்து, வரி வசூல் செய்ய வேண்டும் என நகா்மன்றத் தலைவா் சரஸ்வதி பூபதி வலியுறுத்தினாா்.

திருத்தணி நகராட்சி அலுவலகத்தில், சாதாரண கூட்டம் தலைவா் சரஸ்வதி பூபதி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவா் சாமிராஜ் முன்னிலை வகித்தாா். ஆணையா் பாலசுப்பிரமணி வரவேற்றாா். கூட்டத்தில் வரவு - செலவு கணக்கு சரிபாா்க்கப்பட்டு, வளா்ச்சிப் பணிகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

மேலும், நகராட்சியில், சொத்துவரி செலுத்தாத வீடுகள், காலிமனை வரி செலுத்தாத உரிமையாளா்கள் குறித்து கணக்கெடுத்து, வரி வசூல் செய்வது உள்ளிட்டவை குறித்தும் உறுப்பினா்கள் கருத்து தெரிவித்தனா்.

தொடா்ந்து நகா்மன்றத் தலைவா் சரஸ்வதி சாா்பில் அனைவருக்கும் பொங்கல் பண்டிகையொட்டி வேட்டி, புடவை மற்றும் நாள்காட்டி வழங்கப்பட்டது.

கூட்டத்தில், 18 உறுப்பினா்கள், பொறியாளா், பணிமேற்பாா்வையாளா் உள்பட நகராட்சி அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com