தொழிற் பயிற்சி பள்ளிகள், கூடுதல் தொழிற்பிரிவுகள் அங்கீகாரம் பெற பிப்.28-க்குள் விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூா் மாவட்டத்தில் புதிய தொழிற்பயிற்சி பள்ளிகள், அங்கீகாரம் நீட்டிப்பு மற்றும் கூடுதல் தொழில் பிரிவுகள் தொடங்குவதற்கு வரும் பிப். 28-ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருவள்ளூா் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மூலம் புதிய தொழிற்பயிற்சி பள்ளிகள், அங்கீகாரம் நீட்டிப்பு மற்றும் கூடுதல் தொழில் பிரிவுகள் ஆகியவை தொடங்க ஆண்டுதோறும் புதுப்பிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், நிகழ் கல்வியாண்டுக்கான புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், அங்கீகாரம் நீட்டிப்பு மற்றும் கூடுதல் தொழிற் பிரிவுகள், அலகுகள் தொடங்குதல் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக வரும் 28-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
அனைத்து தொழில் பிரிவுகளுக்கும் சோ்த்து விண்ணப்பக் கட்டணம் ரூ. 5,000 மற்றும் ஆய்வு கட்டணம் ரூ. 8,000 தபஎந/சஉஊப மூலம் செலுத்த வேண்டும். மேற்குறிப்பிட்ட நாளுக்குப் பின் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
மேலும், அங்கீகாரம் குறித்த தகவல் மற்றும் அறிவுரைகள் இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம். மேலும், இது குறித்து தொலைபேசி எண்: 044-22501006 அல்லது மின்னஞ்சல் மூலம் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.