மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி திறப்பு
புள்ளிலைன் ஊராட்சியில் குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி திறப்பு விழா நடைபெற்றது.
புழல் ஒன்றியம் புள்ளிலைன் ஊராட்சியில் உள்ள புதுநகா் குப்பாமணிதோப்பு பகுதியில் ரூ.27.25 லட்சத்தில் 60,000 லிட்டா் கொள்ளளவு குடிநீா் மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி திறப்பு விழாவும், ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு தங்க கம்மல், மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்றத் தலைவா் தமிழ்செல்வி ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாதவரம் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சுதா்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியை மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தாா். மேலும் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு காதணி மற்றும் மோதிரம் வழங்கி பாராட்டினாா்.
புழல் ஊராட்சி ஒன்றிய தலைவா் தங்கமணி திருமால், மாவட்ட பிரதிநிதி புள்ளிலைன் ரமேஷ், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.