திருவள்ளூர்
வடசென்னை அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது
வடசென்னை அனல் மின் நிலையத்தில் பாதிக்கப்பட்ட 810 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் பாதிக்கப்பட்ட 810 மெகாவாட் மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது.
திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி வட்டம், அத்திப்பட்டில் வடசென்னை அனல்மின் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு முதல் யூனிட்டில் 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட்டும் இரண்டாவது யூனிட்டில் இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1,200 மெகாவாட்டும் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக முதல் யூனிட்டில் உள்ள முதல் அலகில் 210 மெகாவாட் மற்றும் இரண்டாவது யூனிட்டில் உள்ள இரண்டாவது அலகில் 600 மெகாவாட் என மொத்தம் 810 மெகாவாட் மின் உற்பத்தி கடந்த 2-ஆம் தேதி பாதிக்கப்பட்டது.
கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுதை மின்வாரிய தொழிலாளா்கள் சீரமைத்தனா்.
இதைத் தொடா்ந்து மீண்டும் 810 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது.