

திருவேற்காட்டில் மழைநீர் வடிகாலில் முறைகேடாக கழிவுநீரை வெளியேற்றிய லாரியை நகராட்சி அதிகாரிகள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, திருவேற்காடு பகுதியில் உள்ள மழைநீர் வடிகாலில், முறைகேடாக கழிவு நீர் வெளியேற்றப்படுவதாக திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்துக்கு தொடர்ந்து புகார் வந்தன.
இது குறித்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் மு.பிரதாப் திருவேற்காடு நகராட்சிக்கு உத்தரவிட்டார். இதையடுத்து நகராட்சி ஆணையர் ராமன் தலைமையிலான அதிகாரிகள் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது திருவேற்காடு வேலப்பன்சாவடி அருகே பள்ளிக்குப்பம், அணுகுச்சாலையில் உள்ள மழைநீர் வடிகாலில் லாரி ஒன்று கழிவுநீரை வெளியேற்றி கொண்டிருந்தது. அந்த லாரியை அதிகாரிகள் மடக்கி பிடித்து திருவேற்காடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இது குறித்து நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையர் ராமன் புகார் அளித்தார்.
போலீஸôர் விசாரணையில் கழிவுநீரை முறைகேடாக வடிகாலில் அப்புறப்படுத்தியது பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பூபதி (31) என்பதும், கழிவுநீர் அகற்றும் லாரி ரஞ்சித் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.