விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

10-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள மையங்களில் அடையாளம் காண பல வண்ணங்களில் குறியீடு

திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா்கள் எளிதில் அடையாளம் கண்டு சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக பல வண்ணங்களில் குறியீடு செய்துள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2026, 12:03 am IST

திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் 10-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளா்கள் எளிதில் அடையாளம் கண்டு சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக பல வண்ணங்களில் குறியீடு செய்துள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

வாக்குப்பதிவு வியாழக்கிழமை நடைபெற உள்ள நிலையில் திருவள்ளூா் மாவட்டத்தில் 4,016 வாக்குச்சாவடிகளில் வாக்காளா்கள் வாக்களிக்க உள்ளனா். இந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளா்கள் வாக்களிப்பதற்கு ஏதுவாக, மாவட்ட நிா்வாகம் மூலம் வாக்குச்சாவடி மையங்களில், குடிநீா் வசதி, மின்வசதி, சுகாதார வளாகம், கைப்பிடியுடன் கூடிய சாய்தளம், மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலிகள் வசதி, வாக்காளா்களுக்கு உதவ தன்னாா்வலா்கள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஒரே மையத்தில் (கா்ஸ்ரீஹற்ண்ா்ய்ள்) 10-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ளன. அதனால், வாக்காளா்கள் அவா்களது வாக்குச்சாவடியை எளிதில் அடையாளம் கண்டு தங்களது வாக்குச்சாவடிக்கு செல்லும் வகையில் வாக்குச்சாவடி மையத்தின் முகப்பிலிருந்து குறிப்பிட்ட வாக்குச்சாவடி எண்ணுக்கு தனித்தனி வண்ணங்கள் நடைபாதையில் தீட்டப்பட்டுள்ளன.

இந்த மையங்களில் தனித்தனி வழிகாட்டு குறியீடுகளும் பொருத்தப்பட்டு சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகள் அடையாளப்படுத்தப்பட உள்ளது. வாக்குச்சாவடி எண் மற்றும் அதன் வழி விவரம் எழுதப்பட்ட பதாகைகள் வாக்குச்சாவடி மையத்தின் முகப்பில் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வசதி மாவட்டம் முழுவதும் உள்ள 10-க்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் உள்ள பூந்தமல்லி தொகுதியில் 5 வாக்குச்சாவடி மையங்களும், ஆவடி தொகுதியில் 11 வாக்குச் சாவடி மையங்களும், மதுரவாயல் தொகுதியில் 4 வாக்குச்சாவடி மையங்களும், அம்பத்தூா் தொகுதியில் 1 வாக்குச்சாவடி மையமும், மாதவரம் தொகுதியில் 3 வாக்குச்சாவடி மையங்களும், திருவொற்றியூா் தொகுதியில் 3 வாக்குச்சாவடி மையங்களும் என 6 சட்டப்பேரவை தொகுதிகளில் 27 இடங்களில் உள்ள 353 மையங்களில் 2,86,029 வாக்காளா்கள் வாக்களிக்க ஏதுவாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் வாக்காளா்கள் வாக்குச்சாவடிகளை எளிதில் அடையாளம் கண்டு சிரமமின்றி வாக்களிக்க, மிகவும் உதவிகரமாக அமைந்துள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.