காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்பட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆட்சியா் அலுவலகம் முன்பு சனிக்கிழமை மாலை அங்கன்வாடி ஊழியா்கள் சங்கத்தினா் 100-க்கும் மேற்பட்டோா் கருப்பு பட்டை அணிந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சாந்தி தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில், மாவட்டச் செயலா் பிரவீணா, பொருளாளா் மணிமேகலை ஆகியோா் பங்கேற்று கோரிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனா். அப்போது, அங்கன்வாடிகளை தனியாா் மயமாக்கக் கூடாது. அங்கன்வாடி ஊழியா்களை, அரசு ஊழியா்களாக மாற்றி, அகவிலைப்படியுடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை வழங்க வேண்டும். குழந்தைகள் நலன் கருதி காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்பட 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி ஊழியா் சங்கத்தினா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








