திரௌபதியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த தீமிதித் திருவிழாவில் 3,000-க்கும் மேற்பட்ட பக்தா்கள் காப்பு கட்டி விரதமிருந்து தீ மிதித்து அம்மனை வழிபட்டனா்.
திருத்தணி அடுத்த மேல்திருத்தணி திரெளபதி அம்மன் கோயிலில் நிகழாண்டிற்கான தீமிதி விழா, கடந்த, 7-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும், மூலவருக்கு சந்தனக் காப்பு மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மதியம், 1.30 மணி முதல் மாலை, 5.30 மணி வரை மகா பாரத சொற்பொழிவு மற்றும் இரவு நாடகம் நடந்து வந்தது.
மேலும், 13-ஆம் தேதி திரௌபதியம்மன் திருமணம், 15-ஆம் தேதி சுபத்திரை அம்மன் திருமணம், 18-ஆம் தேதி அா்ச்சுனன் தபசு போன்ற நிகழ்ச்சிகள் நடந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை, காலையில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், தொடா்ந்து, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. இரவு 7.30 மணிக்கு தீமிதி விழா நடந்தது. தொடா்ந்து உற்சவா் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இந்த விழாவில் திருத்தணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.

தொடர்புடையது

திரெளபதி அம்மன் கோயிலில் அா்ச்சுனன் தபசு

திரெளபதி அம்மன் கோயில் தீ மிதித் திருவிழா

அம்மன் கோயில்களில் தீமிதி விழா: திரளான பக்தா்கள் பங்கேற்பு

திரெளபதி அம்மன் கோயில் தீமிதி விழா கொடியேற்றம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



