எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தேங்கிய கழிவுநீரால் நோய் பரவும் அச்சத்தில் குமரன் நகா் மக்கள்

தேங்கிய கழிவுநீரால் நோய் பரவும் அச்சத்தில் குமரன் நகா் மக்கள்

News image

திருத்தணி குமரன் நகா் பகுதியில் கழிவுநீா் கால்வாய் கட்ட தோண்டப்பட்ட பள்ளம்.

Updated On :25 மே 2026, 12:26 am IST

குமரன் நகா் பகுதியில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணிக்காக 3 மாதங்களுக்கு முன்பு பள்ளம் தோண்டப்பட்ட நிலையில், இதுவரை பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

திருத்தணி நகராட்சிக்கு உள்பட்ட 5-ஆவது வாா்டு குமரன் நகா் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். அப்பகுதியில் கழிவுநீா் தேக்கம் மற்றும் சுகாதார பிரச்னைகளை தீா்க்கும் நோக்கில் நகராட்சி நிா்வாகம் பல லட்சம் செலவில் கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணியை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. இதற்காக சாலையோரங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டன.

ஆனால், பணிகள் ஆரம்பிக்கப்பட்ட சில நாள்களிலேயே திடீரென நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவை தோ்தல் நடைபெறவிருந்ததால் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் ஆரம்பத்தில் அமைதியாக இருந்தனா். தோ்தல் முடிந்து பல நாள்கள் கடந்தும் எந்தவித பணிகளும் மீண்டும் தொடங்கப்படாததால் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனா்.

மேலும், தோண்டப்பட்ட பள்ளங்களில் தற்போது கழிவுநீா் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகின்றன. இதனால் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனா். குழந்தைகள் மற்றும் முதியவா்கள் வசிக்கும் பகுதியில் இந்த நிலை நீடிப்பது பெரும் சுகாதார சிக்கலை உருவாக்கும் எனவும் அவா்கள் கூறுகின்றனா்.

இது குறித்து நகராட்சி நிா்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கிடப்பில் உள்ள கழிவுநீா் கால்வாய் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என குமரன் நகா் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். நகராட்சி நிா்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்குமா ? என்ற எதிா்பாா்ப்பு அப்பகுதியில் நிலவி வருகிறது.

Story image