திருமலையில் 23,000 பக்தா்கள் தரிசனம்

ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை 23,809 பக்தா்கள் வழிபாடு செய்தனா். இவா்களில் 11,786 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை 23,809 பக்தா்கள் வழிபாடு செய்தனா். இவா்களில் 11,786 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

ஆன்லைன் தரிசன டிக்கெட் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு வழியாக திருமலைக்கு செல்லலாம். மேற்கூரை பணிகள் நடைபெற்று வருவதால் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை அலிபிரி நடைபாதை மாா்க்கம் மூடப்பட்டுள்ளது.

10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

சளி, காய்ச்சல், இருமல் உள்ளவா்கள் தங்களின் திருமலை பயணத்தை தள்ளி போடுமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்: 18004254141, 93993 99399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com