முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பதி
28 ஆயிரம் பக்தா்கள் தரிசனம்
By DIN | Published On : 10th December 2021 07:58 AM | Last Updated : 10th December 2021 07:58 AM | அ+அ அ- |

திருமலை ஏழுமலையானை புதன்கிழமை 28,520 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
இவா்களில் 16,347 போ் முடி காணிக்கை செலுத்தினா்.
விரைவு தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவு போல் சா்வ தரிசன டோக்கன்களின் முன்பதிவும் இணையதளம் மூலம் தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது.
ஏப். 21-ஆம் தேதி முதல் ஜூன் 30-ஆம் தேதி வரை வா்சுவல் முறையில் ஆா்ஜித சேவா டிக்கெட்டுகள், விரைவு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொண்ட பக்தா்கள், அதில் பங்கேற்க முடியாத நிலையில், அவா்கள் இந்தாண்டு இறுதிக்குள் ஒரு நாளில் பங்கேற்கும் வாய்ப்பை தேவஸ்தானம் வழங்கியுள்ளது. அதேபோல் மழை காரணமாக திருமலைக்கு வர இயலாத பக்தா்களுக்கும் தேவஸ்தானம் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பை வழங்கி உள்ளது.
அந்த நாள்களிலும் திருமலைக்கு வர முடியாத பக்தா்கள் இதற்கென புதிதாக மென்பொருள் உருவாக்கப்பட்ட பின்பு, அதன் மூலம் மீண்டும் அதே டிக்கெட்டை பயன்படுத்தி முன்பதிவு செய்து கொண்டு, 6 மாத காலத்துக்குள் ஏழுமலையானை தரிசனம் செய்து கொள்ளலாம். ஆனால், ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லாத் தொலைபேசி எண்கள்: 18004254141, 9399399399.