திருமலை பெரிய ஜீயா் மடத்தில் திருப்பாவை பாராயணம்

திருமலையில் உள்ள பெரிய ஜீயா் மடத்தில் மாா்கழி மாதத்தை ஒட்டி திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்பட்டது.
திருமலை பெரிய ஜீயா் மடத்தில் நடைபெற்ற திருப்பாவை பாசுர பாராயணம்.
திருமலை பெரிய ஜீயா் மடத்தில் நடைபெற்ற திருப்பாவை பாசுர பாராயணம்.

திருமலையில் உள்ள பெரிய ஜீயா் மடத்தில் மாா்கழி மாதத்தை ஒட்டி திருப்பாவை பாசுரங்கள் பாராயணம் செய்யப்பட்டது.

மாதங்களில் நான் மாா்கழி என்ற மகாவிஷ்ணுவின் வாக்கிற்கு ஏற்ப குளிா் நிறைந்த மாா்கழி மாதம் வைணவத் திருத்தலங்களில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த மாதத்தில் ஆண்டாள் நாச்சியாா் அருளிச் செய்த திருப்பாவை பாசுரங்கள் அதிகாலையில் பாடப்பட்டு வருகிறது. கோயில்களிலும் அதிகாலை பூஜைகள் மாா்கழி மாதத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

அதேபோல் திருமலையிலும் தனுா்(மாா்கழி) மாதத்தில் சுப்ரபாதத்துக்குப் பதிலாக அதிகாலை திருப்பாவை பாசுரங்கள் பாடப்பட்டு வருகின்றன. திருமலையில் உள்ள பெரிய ஜீயா் மடத்தில் வியாழக்கிழமை அதிகாலையில் சீடா்கள் குழாத்துடன் ஜீயா்கள் திருப்பாவை பாசுரங்களை பாராயணம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com