முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பதி
ராகவேந்திர மடாதிபதி தரிசனம்
By DIN | Published On : 19th December 2021 12:00 AM | Last Updated : 19th December 2021 12:00 AM | அ+அ அ- |

திருமலையில் ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை வழிபாடு செய்த மந்திராலய ராகவேந்திர மடத்தின் மடாதிபதி ஸ்ரீசுபுதேந்திர தீா்த்த சுவாமிகள்.
திருப்பதி, டிச.18: திருமலை ஏழுமலையான் கோயிலில், கா்நாடக மாநிலம் மந்திராலயத்தில் உள்ள ராகவேந்திர மடத்தின் மடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ சுபுதேந்திர தீா்த்த சுவாமிகள் சனிக்கிழமை வழிபட்டாா். முன்னதாக கோயில் முன் வாசலுக்கு வந்த அவரை தேவஸ்தான அதிகாரிகள் கோயில் மரியாதை அளித்து வரவேற்றனா். பின்னா் தன் சீடா்களுடன் கொடிமரத்தை வணங்கி சென்று ஏழுமலையானை தரிசித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் சேஷ வஸ்திரம், பிரசாதங்கள் உள்ளிட்டவற்றை வழங்கினா்.