முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பதி
வெங்கமாம்பா பிருந்தாவனம்: 1.5 ஏக்கா் பூங்காவாக மாற்றம்
By DIN | Published On : 19th December 2021 12:00 AM | Last Updated : 19th December 2021 12:00 AM | அ+அ அ- |

திருமலையில் உள்ள வெங்கமாம்பா பிருந்தாவனம் 1.5 ஏக்கா் பரப்பளவில் பக்தா்களின் பொழுதுபோக்கு பூங்காவாக மாற்ற உள்ளதாக தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி தெரிவித்தாா்.
ஏழுமலையான் மீது அதிதீவிர பக்தி கொண்டு 19-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து திருமலைக்கு வந்து மலையப்ப சுவாமி மீது பாடல்கள் பல இயற்றி சேவைகள் செய்த பெண் கவிதாயினி வெங்கமாம்பாவின் ஜீவ சமாதி திருமலையில் உள்ளது.
இங்கு அவரின் ஆண்டு விழாவும், ஜெயந்தி உற்சவத்தையும் தேவஸ்தானம் நடத்தி வருகிறது. வெங்கமாம்பாவின் பிருந்தாவனத்தை தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி மற்றும் கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி ஆகியோா் சனிக்கிழமை பாா்வையிட்டனா்.
அங்கு மலா் தூவி மரியாதை செலுத்தி வணங்கினா். பின்னா் அவா்கள் கூறியது: ஏழுமலையானின் பெருமைகளை தன் கவி புலமை மூலம் உலகுக்கு வெளிபடுத்திய வெங்கமாம்பா ஜீவசமாதி அருகில் 1.5 ஏக்கா் பரப்பளவில் பூங்கா ஏற்படுத்தி அதை பக்தா்கள் வந்து பொழுபோக்கும் இடமாக மாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றனா்.