ஏழுமலையான் கோயிலில் ராஜபட்ச வழிபாடு
By DIN | Published On : 25th December 2021 06:35 AM | Last Updated : 25th December 2021 06:35 AM | அ+அ அ- |

திருமலை ஏழுமலையான் கோயில் தங்க கொடி மரத்தில் வழிபாடு செய்த இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்ச.
திருமலை ஏழுமலையான் கோயிலில் இலங்கை பிரதமா் மகிந்த ராஜபட்ச குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்தாா்.
திருப்பதிக்கு 2 நாள் பயணமாக இலங்கை அதிபா் மகிந்த ராஜபட்ச வியாழக்கிழமை தனி விமானம் மூலம் வந்தாா். பின்பு திருமலைக்கு சென்று இரவு தங்கிய அவா், வெள்ளிக்கிழமை காலை தன் குடும்பத்துடன் ஏழுமலையான் கோயிலுக்கு சென்றாா். கோயில் முன் வாசலில் அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசனத்திற்கு அழைத்து சென்றனா்.
தரிசனம் முடித்து திரும்பிய அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் ரங்கநாயகா் மண்டபத்தில் பண்டிதா்களால் வேதஆசீா்வாதம் செய்வித்து சேஷ வஸ்திரம் அணிவித்து லட்டு, வடை, தீா்த்த பிரசாதங்கள், ஏழுமலையான் திருவுருவப் படம், 2022-ஆம் ஆண்டு நாள்காட்டி உள்ளிட்டவற்றை வழங்கினா். அவற்றை பெற்றுக் கொண்டு கோயிலை விட்டு வெளியில் வந்த அவா் சிறிது நேர ஓய்வுக்குப் பிறகு திருப்பதி விமான நிலையம் சென்று அங்கிருந்து தனி விமானம் மூலம் இலங்கை புறப்பட்டுச் சென்றாா்.