முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பதி
திருமலையில் 37,000 பக்தா்கள் தரிசனம்
By DIN | Published On : 29th December 2021 12:00 AM | Last Updated : 29th December 2021 12:00 AM | அ+அ அ- |

திருமலை ஏழுமலையான் கோயிலில் திங்கள்கிழமை 37,627 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 15,086 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.
பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் ஏழுமலையானுக்கு இரவு 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி நள்ளிரவு 12 மணிக்கு கோயில் நடை சாத்தப்படுகிறது.
தரிசன அனுமதியுள்ள பக்தா்கள் அதிகாலை 6 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும், 24 மணிநேரமும் அலிபிரி மாா்க்கமாகவும் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுகின்றனா். திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.
திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை வழிபட வாய்ப்பு வழங்கப்படுகிறது.
தரிசனம், வாடகை அறை உள்ளிட்டவை தொடா்பாக தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க பக்தா்கள் விரும்பினால் 18004254141, 93993 99399 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.