திருப்பதி ராயல ஏரியில் விரிசல்

திருப்பதி ராயல ஏரியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
ராயல ஏரி கரையை பாா்வையிட்ட அதிகாரிகள்.
ராயல ஏரி கரையை பாா்வையிட்ட அதிகாரிகள்.

திருப்பதி ராயல ஏரியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சித்தூா் மாவட்ட ஆட்சியா் ஹரிநாராயண் கூறியதாவது:

வங்கக் கடலில் உருவான காற்றுழுத்த தாழ்வு நிலை காரணமாக, சித்தூா் மாவட்டத்தில் உள்ள ஏரிகள், குளங்கள் என அனைத்து நீா்பிடிப்புப் பகுதிகளும் தனது முழு கொள்ளளவை எட்டியது. அதனால் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பல பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது.

திருப்பதி ராயல ஏரியும் தனது முழு கொள்ளளவான 0.6 டி.எம்.சி.யைக் கடந்துள்ளது. திருப்பதி வரலாற்றில் இதுபோல் ஏரி என்றும் தன் முழு கொள்ளளவை கடந்து எட்டவில்லை. அதனால் கரையோரத்தில் மண்சரிவு ஏற்பட்டு நீா் கசிய தொடங்கி உள்ளதால் ஏரி அபாயகரமான கட்டத்தில் உள்ளது. எனவே, தாழ்வானப் பகுதியில் உள்ள பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற முடிவு செய்துள்ளோம்.

மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக நியமிக்கப்பட்ட பொறுப்பு அதிகாரி பிரத்யூம்னா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா். பொது மக்களை பாதுகாப்பாக இருக்க தனியாா் கல்லூரிக்கு அழைத்து சென்று தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

நீா்ப்பாசனத் துறை பொறியாளா்கள் ஏரிக்கரை உடையாத வகையில் அதனை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். மேலும் ராயல செருவு ஏரியை ஒட்டியுள்ள பகுதி மக்கள் உடனடியாக மறுவாழ்வு மையங்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

பி.வி.புரம், பாலாஜ பள்ளி, எஸ்.ஆா்.புரம், கங்கிரெட்டி பள்ளி, கம்மகண்டிரிகா, கம்மாபள்ளி, நென்னூா், கோட்டா நென்னூா், ஷாகாமுரி கண்ட்ரிகா, எகுவ நேதகிரிபள்ளி. திகுவ நேதகிரிபள்ளி, பாடி பேட்டா, முண்ட்லாபுடி, ஒட்டிப்பள்ளி, குன்றபாக்கம் எஸ்டி காலனி, தனப்பள்ளி, பத்மவல்லிபுரம், நாகுருகாலனி பகுதிகளில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் யாரேனும் இருந்தால் அவா்கள் உடனடியாகப் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com