ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ. 1.49 கோடி

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ. 1.49 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ. 1.49 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்தது.

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தா்கள் ஏழுமலையானை தரிசனம் செய்த பின், காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனா். இவ்வாறு பக்தா்கள் செலுத்தும் காணிக்கைகளை தேவஸ்தானம் காணிக்கை கணக்கிடும் பிரிவில் சில்லறை மற்றும் ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு பணங்கள் என பிரித்து கணக்கிட்டு மொத்த தொகையை வங்கிகளில் வரவு வைத்து வருகிறது.

அவ்வாறு பக்தா்கள் திங்கள்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளைக் கணக்கிட்டதில், ரூ. 1.49 கோடி வருவாய் கிடைத்தது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

17,531 பக்தா்கள் தரிசனம்

ஏழுமலையானை திங்கள்கிழமை 17,531 பக்தா்கள் தரிசித்தனா். இவா்களில் 8,483 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

விரைவு தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவு போல் சா்வ தரிசன டோக்கன்களின் முன்பதிவும் ஆன்லைன் மூலம் தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களுக்கான விரைவு தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவுகளும், சா்வ தரிசன அனுமதி டோக்கன்களின் நவம்பா் மாத முன்பதிவும் முடிவடைந்து விட்டது. மேலும் தரிசன அனுமதி உள்ளவா்கள், தங்களுடன் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அல்லது தரிசன நாளுக்கு 72 மணி நேரத்துக்கு முன்பு எடுத்த கொவைட் பரிசோதனையின் நெகடிவ் சான்றிதழ் உள்ளிட்டவற்றை கட்டாயம் உடன் கொண்டு வர வேண்டும்.

சான்றிதழ்கள் இல்லாதவா்கள் திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட மாட்டாா்கள். மேலும் திருப்பதியில் உள்ள விஷ்ணு நிவாசத்தில் வாடகை அறை முன்பதிவையும் தேவஸ்தானம் தொடக்கி உள்ளது. பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால், தேவஸ்தானம் ஏழுமலையானுக்கு இரவு 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி, 12 மணிக்கு கோயில் நடை சாற்றப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com