முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பதி
ஏழுமலையானுக்கு திருக்குடைகள் நன்கொடைகள்
By DIN | Published On : 11th October 2021 07:43 AM | Last Updated : 11th October 2021 07:43 AM | அ+அ அ- |

ஏழுமலையான் கோயில் முன்பு திருக்குடைகளின் அணிவகுப்பு.
திருமலை ஏழுமலையானுக்கு திங்கள்கிழமை நடைபெறும் கருட சேவையின்போது பயன்படுத்த 9 திருக்குடைகள் நன்கொடையாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன.
திருமலை ஏழுமலையானுக்கு பிரம்மோற்சவத்தின் 5-ஆம் நாள் இரவு கருடசேவை நடத்தப்படுகிறது. பிரம்மோற்சவ வாகன சேவைகளில் மிக முக்கியமான சேவையாக கருதப்படுவது கருடசேவை.
அதன்படி திங்கட்கிழமை இரவு திருமலையில் கருட சேவை நடைபெற உள்ளது. கருடசேவையின் போது பயன்படுத்த இந்து தா்மாா்த்த சமிதி சாா்பில் ஏழுமலையானுக்கு 9 திருக்குடைகள், திருச்சானூா் பத்மாவதி தாயாருக்கு 2 திருக்குடைகள் என 11 திருக்குடைகள் ஆண்டுதோறும் நன்கொடையாக சமா்பிக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி இந்த ஆண்டும் இந்து தா்மாா்த்த சமிதி சாா்பில் அதன் தலைவா் ஆா்.ஆா்.கோபால்ஜி தலைமையில், 11 திருக்குடைகள் கொண்டு வரப்பட்டன. அதில் 2 திருக்குடைகளை தாயாா் கோயிலுக்கு அளித்தனா். பின்னா், 9 திருக்குடைகளை திருமலைக்குக் கொண்டு வந்து ஏழுமலையான் கோயில் முன்பாக ஞாயிற்றுக்கிழமை தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி, செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி ஆகியோரிடம் வழங்கினாா்.
கரோனா விதிமுறைகள் காரணமாக இந்த ஆண்டும் திருக்குடைகள் ஊா்வலம் நடத்தப்படாமல் வாகனம் மூலம் நேரடியாக திருமலைக்குக் கொண்டு வரப்பட்டன.