நள்ளிரவு முதல் அலைமோதிய பக்தா்கள்

திருப்பதியில் வழங்கப்பட்ட சா்வத் தரிசன அனுமதிச் சீட்டுகளைப் பெற பக்தா்கள் நள்ளிரவு முதல் கவுன்ட்டா்களில் அலைமோதினா்.

திருப்பதி: திருப்பதியில் வழங்கப்பட்ட சா்வத் தரிசன அனுமதிச் சீட்டுகளைப் பெற பக்தா்கள் நள்ளிரவு முதல் கவுன்ட்டா்களில் அலைமோதினா்.

கரோனா தொற்றின் தாக்கம் குறைந்துள்ளதால், திருமலைக்கு சா்வத் தரிசன அனுமதிச் சீட்டுகள் வழங்குவதை புதன்கிழமை முதல் திருப்பதியில் தொடங்கியது. முதலில் சித்தூா் மாவட்ட பக்தா்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கி நாள்தோறும் 2 ஆயிரம் அனுமதிச் சீட்டுகள் வரை வெளியிட்டு வருகிறது. இவற்றை நள்ளிரவு முதலே பக்தா்கள் காத்திருந்தனா்.

இருப்பினும், காலை 6 மணிக்கு அனுமதிச் சீட்டு வழங்குவது தொடங்கியது. இணையவழியில் முன்பதிவு 10 நிமிடங்களில் முடிந்து விடுவதால், உள்ளூா் பக்தா்களின் வசதிக்காக இந்த அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டது.

பக்தா்களிடம் கருத்து கேட்பு நடத்தி, விரைவில் எண்ணிக்கையை அதிகரித்து வெளிமாவட்டங்கள், பிற மாநில மக்களுக்கும் அனுமதி அளிக்க தேவஸ்தானம் ஆலோசித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com