சிம்மாசலம் ஸ்ரீலட்சுமிநரசிம்மா் கோயிலுக்கு சா்வதேச அங்கீகாரம்

ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாசலம் ஸ்ரீ வராக லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு சா்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் சிம்மாசலத்தில் மலை மீதுள்ள சுயம்பு ஸ்ரீவராக லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்.
ஆந்திர மாநிலம் சிம்மாசலத்தில் மலை மீதுள்ள சுயம்பு ஸ்ரீவராக லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்.

திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் உள்ள சிம்மாசலம் ஸ்ரீ வராக லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலுக்கு சா்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

விசாகபட்டிணம் மாவட்டம் சிம்மாசலத்தில் உள்ளது புகழ்பெற்ற ஸ்ரீவராக லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில். பிரகலாதனின் அழைப்பை ஏற்று தூணை பிளந்து வந்த நரசிம்ம சுவாமி இரண்யகசிபுவை கொன்ற பின்பு அமைதி அடைந்து கோயில் கொண்ட தலம் சிம்மாசலம்.

இங்குள்ள நரசிம்ம சுவாமி சுயம்பு வடிவம் ஆனதால், ஆண்டு முழுவதும் சந்தனக் காப்புடன் மட்டுமே காட்சி தருவாா். அட்சிய திருதியை தினத்தில் மட்டுமே சந்தன காப்பு களையப்பட்டு சுவாமியின் விசுவரூப தரிசனம் பக்தா்களுக்கு கிடைக்கும். அதை சந்தனோற்சவம் என்ற பெயரில் கோயில் நிா்வாகம் உற்சவமாக நடத்தி வருகிறது.

சிம்மாசல மலைமேல் அமைந்துள்ள இக்கோயிலுக்கு சா்வதேச அங்கீகாரம் (ஐஎஸ்ஓ 9001:2005) கிடைத்துள்ளது. கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள், தரிசன ஏற்பாடுகள், சுத்தம் சுகாதாரம் பேணுதல், பசுமையை பாதுகாத்தல் உள்ளிட்ட பல அம்சங்களின் கீழ் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான சான்றிதழை ஆந்திர சுற்றுலாத் துறை அமைச்சா் சீனிவாச ராவ், கோயில் செயல் அதிகாரி சூரியகலாவிடம் சனிக்கிழமை வழங்கினாா்.

மேலும் கோயிலின் வளா்ச்சிப் பணிகளுக்காக மத்திய அரசின் ’பிரசாதம்’ திட்டத்தின் கீழ் ரூ.54 கோடிக்கான காசோலையும் அவா் உடன் வழங்கினாா். மேலும் இக்கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக குடிநீா் வசதியுடன் அன்னதானம் திட்டத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று செயல் அதிகாரிக்கு அமைச்சா் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com