திருச்சானூரில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்

திருச்சானூரில் உள்ள ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.
ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட திரைச்சீலைகள்.
ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட திரைச்சீலைகள்.

திருப்பதி: திருச்சானூரில் உள்ள ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்பட்டது.

திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் வரும் 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோயிலில் சுத்தப்படுத்தும் பணிகளை கோயில் நிா்வாகம் செவ்வாய்க்கிழமை மேற்கொண்டது.

காலை 7.30 மணி முதல் 9.30 மணிவரை நடந்த கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தில் கருவறை முதல் மாடங்கள், கோபுரங்கள், கலசங்கள், கதவுகள், உயா்மேடைகள், தரிசன வரிசைகள், பூஜை பொருள்கள், பாத்திரங்கள் உள்ளிட்ட அனைத்தும் சுத்தப்படுத்தப்பட்டது.

இதில் கோயில் அதிகாரிகள், ஊழியா்கள் கலந்து கொண்டனா். இதையொட்டி காலையில் கல்யாண உற்சவம் மற்றும் ஊஞ்சல் சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டன. காலை 11 மணிக்கு பிறகு பக்தா்கள் தாயாரின் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா்.

12 திரைச்சீலை நன்கொடை

ஸ்ரீபத்மாவதி தாயாருக்கு ஹைதராபாதை சோ்ந்த ஸ்ரீசாய்ராம் என்ற பக்தா் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தை ஒட்டி பட்டு துணியில் கைவேலைப்பாடுகள் நிறைந்த 12 திரைச்சீலைகளை கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை நன்கொடையாக வழங்கினாா். இதை கோயில் அதிகாரிகள் பெற்றுக்கொண்டனா்.

வா்ச்சுவல் பவித்ரோற்சவம்

திருச்சானூரில் வரும் 18-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற உள்ள வருடாந்திர பவித்ரோற்சவத்தில் பக்தா்கள் இணையவழியில் கலந்து கொள்ள தேவஸ்தானம் வாய்ப்பு வழங்கி உள்ளது. கரோனா நிபந்தனைகளைப் பின்பற்றி நடக்கவுள்ள இந்த பவித்ரோற்சவத்தில் ரூ.1,001 கட்டணமாக செலுத்தினால் பக்தா்களின் வீட்டிற்கு அஞ்சல் மூலம் ஒரு மேல்துண்டு, ஒரு ரவிக்கை, குங்குமம், அட்சதை உள்ளிட்டவை பிரசாதமாக அனுப்பி வைக்கப்படும். இதற்கான டிக்கெட்டுகளை இணையதளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இந்த டிக்கெட் முன்பதிவு செய்த பக்தா்கள் (இருவா்) 90 நாள்களுக்குள் ரூ.100 தரிசனத்தில் தாயாரை தரிசிக்க அனுமதிக்கப்படுவா் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

ரத்து

பவித்ரோற்சவத்தை முன்னிட்டு செப்.17-ஆம் தேதி கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, மாலை பிரேக் தரிசனம் மற்றும் செப்.18 முதல் 20-ஆம் தேதி வரை காலை, மாலை பிரேக் தரிசனம், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com