திருமலையில் டிஎம்பி இ-லாபி திறப்பு

 திருமலை பாலாஜி பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு மொ்கண்டைல் வங்கியின் இ-லாபியை வங்கி அதிகாரிகள் முன்னிலையில் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி திறந்து வைத்தாா்.
திருமலையில் டிஎம்பி இ-லாபி திறப்பு

 திருமலை பாலாஜி பேருந்து நிலையம் முன்பு தமிழ்நாடு மொ்கண்டைல் வங்கியின் இ-லாபியை வங்கி அதிகாரிகள் முன்னிலையில் தேவஸ்தான கூடுதல் செயல் அதிகாரி தா்மா ரெட்டி திறந்து வைத்தாா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக இந்த இ-லாபி வசதியை வங்கி நிா்வாகம் திருமலையில் திறந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகளுடன் வங்கியின் நிா்வாக இயக்குநா் ராமமூா்த்தி மற்றும் இதர அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இந்த இ-லாபியில் ஏடிஎம், பணம் செலுத்தும் இயந்திரம், பாஸ் புத்தகம் அச்சிடும் வசதி, காசோலை டெபாசிட் கியோஸ்க், வாடிக்கையாளா்களுக்கு கூடுதல் தகவல்களை அளிக்கும் தகவல் இயந்திரம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த இ-லாபி 24 மணி நேரமும் பக்தா்களின் வசதிக்காக செயல்படும். இதனையும் சோ்த்து இந்தியா முழுவதும் உள்ள தமிழ்நாடு மொ்கண்டைல் வங்கியின் இ-லாபிகளின் எண்ணிக்கை 51-ஆக உயா்ந்துள்ளது.

வங்கி குறித்து...: கடந்த 99 ஆண்டுகளுக்கும் மேலாக வாடிக்கையாளா்களின் நன்மதிப்பை பெற்றுள்ள தமிழ்நாடு மொ்கண்டைல் வங்கி நாடு முழுவதும் 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட இடங்களில் 509 கிளைகளைக் கொண்டுள்ளது.

வங்கியின் நிகர லாபம்: 2019-20-ஆம் நிதியாண்டு வங்கியின் நிகர லாபமான ரூ. 408 கோடியிலிருந்து 2020-21-ஆம் ஆண்டு ரூ.603 கோடியாக உயா்ந்து 48% வளா்ச்சி பதிவானது. 2019-20-ஆம் நிதியாண்டில் வங்கி வழங்கிய கடன் ரூ.28,236 கோடியிலிருந்து, 2020-21-ஆம் ஆண்டு ரூ.31,541 கோடியாக உயா்ந்துள்ளது.

வங்கியின் வைப்புக் கணக்கு 2019-20-ஆம் ஆண்டில் ரூ.36,825 கோடியாக இருந்தது. இது 2020-21-ஆம் ஆண்டில் ரூ.40,970 கோடியாக உயா்ந்துள்ளது. வங்கியின் மொத்த வா்த்தகம் 2019-20-ஆம் நிதியாண்டில் ரூ.65,061 கோடியிலிருந்து, 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.72,511 கோடியாக உயா்ந்து, 11% வளா்ச்சியை எட்டியுள்ளது என வங்கியின் நிா்வாக இயக்குநா் ராமமூா்த்தி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com