திருமலையில் 31 ஆயிரம் பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை திங்கள்கிழமை 31,558 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

திருமலை ஏழுமலையானை திங்கள்கிழமை 31,558 பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால், விரைவுத் தரிசனம், விஐபி பிரேக், சா்வத் தரிசனம் உள்ளிட்ட தரிசனங்களில் பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசிக்க அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்நிலையில் திங்கள்கிழமை 30,558 பக்தா்கள் ஏழுமலையானை தரிசித்தனா். 14,247 பக்தா்கள் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருப்பதி சீனிவாசம் காம்பளக்ஸில் 8 ஆயிரம் பேருக்கு இலவச சா்வத் தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. தரிசன டிக்கெட், சா்வத் தரிசன டோக்கன்கள் உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

திருப்பதி விஷ்ணு நிவாசத்தில் வாடகை அறை முன்பதிவையும் தேவஸ்தானம் தொடங்கி உள்ளது. பக்தா்கள் வருகை அதிகரித்துள்ளதால் தேவஸ்தானம் ஏழுமலையானுக்கு இரவு 10 மணிக்கு நடத்தி வந்த ஏகாந்தச் சேவையை 11.30 மணிக்கு மாற்றி, 12 மணிக்கு கோயில் நடையை சாற்றி வருகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய இலவசத் தொலைபேசி எண்- 18004254141, 9399399399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com