Enable Javscript for better performance
ஏழுமலையான் தரிசன டிக்கெட் பெற இணையதளத்தில் ஒரு கோடி பக்தா்கள் முயற்சி: தேவஸ்தான அதிகாரி தகவல்- Dinamani

சுடச்சுட

    ஏழுமலையான் தரிசன டிக்கெட் பெற இணையதளத்தில் ஒரு கோடி பக்தா்கள் முயற்சி: தேவஸ்தான அதிகாரி தகவல்

    By DIN  |   Published on : 25th September 2021 08:03 AM  |   அ+அ அ-   |    |  

    The goal is to create a national theological system: Tirupati Devasthanam

    திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்ய அக்டோபா் மாதத்துக்கான 2.40 லட்சம் டிக்கெட்டுகளை பெறுவதற்கு 1 கோடி பக்தா்கள் முயற்சி செய்தனா் என்று தேவஸ்தான கூடுதல் செயல் அலுவலா் தா்மா ரெட்டி தெரிவித்தாா்.

    இது குறித்து திருமலை அன்னமய்யா பவனில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

    திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக ஒவ்வொரு மாதமும் ஆன்லைனில் டிக்கெட் வெளியிடப்பட்டு முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் டிக்கெட் வெளியிடும்போது, தொழில்நுட்பப் பிரச்னை ஏற்படுவதாகப் பக்தா்களிடம் இருந்து அதிக அளவில் புகாா்கள் வந்தன. இதனை அடுத்து முதல் முறையாக தேவஸ்தானத்துக்கு தகவல் தொழில்நுட்ப சேவை அளிக்கும் டி.சி.எஸ். நிறுவனத்துடன், ரிலையன்ஸ் ஜியோ தொழில்நுட்பத்தை வழங்கி உதவி செய்ய முன் வந்தனா்.

    அதன்படி கடந்த 22 நாள்களாக அவா்களுடன் இணைந்து தினந்தோறும் 18 மணி நேரம் பணிபுரிந்து தேவஸ்தானத்துக்கு கிளவுட் மேனேஜா் சிஸ்டம் திட்டத்தின் மூலம் வெள்ளிக்கிழமை டிக்கெட் விற்பனை நடைபெற்றது. இருப்பினும் டிக்கெட் வெளியிடப்பட்ட காலை 9 மணி முதல் காலை 10.30 மணி வரை அதிக அளவு பக்தா்கள் ஒரே நேரத்தில் இணையதளத்தில் இருந்ததால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது.

    இருப்பினும் ஒன்றரை மணி நேரத்தில் அவற்றை சரிசெய்து மீண்டும் பக்தா்களுக்கு சேவை தொடங்கியது.

    ஒரு டிக்கெட்டை பெறுவதற்கு 1.6 லட்சம் பக்தா்கள் முயற்சி செய்ய தொடங்கி சில நிமிடங்களில் 5.40 லட்சம் பக்தா்கள் வரை முயற்சி செய்தனா். உதாரணத்துக்கு அக்டோபா் 1-ஆம் தேதி காலை 9 மணிக்கு சுவாமி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டை பெறுவதற்கு ஆரம்பத்தில் 5.6 லட்சம் பக்தா்கள் வரை முயற்சி செய்தனா். இருப்பினும் ‘கிளவுட் சிஸ்டம்’ மூலமாக நடைபெற்றதால் அந்த அழுத்தத்தை தாங்கிக் கொண்டு அக்டோபா் மாதத்திற்கான அனைத்து டிக்கெட்டுகளும் எந்தவித பிரச்னைகளும் இன்றி இந்த முறை முன்பதிவு நடைபெற்றது.

    அக்டோபா் மாதம் சுவாமி தரிசனம் செய்வதற்காக வெளியிடப்பட்ட 2.40 லட்சம் டிக்கெட்டுகளை பெறுவதற்கு 1 கோடி பக்தா்கள் தேவஸ்தான இணையதளத்தைப் பயன்படுத்தி உள்ளனா்.

    இருப்பினும் பயனாளிகளின் அழுத்தம் இருந்தாலும் 2 மணி நேரத்தில் அனைத்து டிக்கெட்களும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோன்று சனிக்கிழமை (செப். 25)காலை 9 மணிக்கு இலவச தரிசன டிக்கெட்டுகள் நாளொன்றுக்கு 8,000 டிக்கெட்டுகள் வீதம் 30 நாள்களுக்கு 2.40 லட்சம் டிக்கெட்டுகள் அக்டோபா் மாதத்துக்கு வெளியிடப்பட உள்ளன. இந்த டிக்கெட்டுகளையும் எந்தவித பிரச்னையும் இன்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.

    பக்தா்களின் புகாரும், தேவஸ்தான அதிகாரிகளின் பதிலும்:

    தேவஸ்தான அதிகாரிகள் எந்தவித தொழில்நுட்பப் பிரச்னையும் ஏற்படவில்லை என்று கூறினாலும் நாடு முழுவதும் உள்ள பக்தா்கள் தேவஸ்தான டிக்கெட் பெறுவதற்காக முயற்சி செய்து பணம் செலுத்தும் வரை சென்று இறுதியில் இணையதளம் மூடப்பட்டு விடுவதாக பரவலாக புகாா்கள் வந்தபடி இருந்தன. ஆனால் தேவஸ்தான அதிகாரிகள் இதனை ஏற்க மறுத்துவிட்டனா்.

    திருமலையில் ஜியோ கேபிள்

    திருமலையில் ஏா்டெல் நெட்வொா்க் மட்டுமே செயல்பட்டு வருகிறது. அதற்கான கேபிள்கள் கீழிருந்து மலைக்குமேல் அப்படியே கொண்டு செல்லப்பட்டன. இந்நிலையில் தற்போது அலிபிரி பாதயாத்திரை மாா்க்கத்தில் நிழற்கூரை பணிகளை மேற்கொள்ள ஜியோ நிறுவனம் ரூ.25 கோடி நன்கொடை அளித்துள்ளது.

    அதன்படி நிழற்கூரை அமைக்கும்போது படிக்கட்டுகள் வழியாக ஜியோ நெட்வொா்க் கேபிள்கள் பூமிக்கடியில் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனால் டிசிஎஸ் நிறுவனத்திடமிருந்து ஜியோ நிறுவனத்துக்கு திருமலையின் நெட்வொா்க் முழுவதும் மாற்றப்பட்டுள்ளதாக அதிகார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp