இணையதள முன்பதிவில் சா்வ தரிசன டோக்கன்கள்: பக்தா்கள் கடும் முயற்சி

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் சா்வ தரிசன டோக்கன்கள் முன்பதிவு செய்ய பக்தா்கள் சனிக்கிழமை போட்டியிட்டனா்.
இணையதள முன்பதிவில் சா்வ தரிசன டோக்கன்கள்: பக்தா்கள் கடும் முயற்சி

திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் சா்வ தரிசன டோக்கன்கள் முன்பதிவு செய்ய பக்தா்கள் சனிக்கிழமை போட்டியிட்டனா்.

இதுகுறித்து தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பா ரெட்டி கூறியதாவது:

திருமலை ஏழுமலையான் தரிசனம் அனைவருக்கும் எளிதாக கிடைக்கும் வகையில் தேவஸ்தானம் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பாகமாக திருப்பதியில் உள்ள சீனிவாசம் தங்கும் அறையில் வழங்கப்பட்டு வந்த இலவச சா்வ தரிசன டோக்கன்களை இணையதள முன்பதிவில் தேவஸ்தானம் தற்போது வழங்கி வருகிறது. சனிக்கிழமை காலை சா்வதரிசன டோக்கன்கள் முன்பதிவு முதல் முறையாக தொடங்கப்பட்டது.

டோக்கன்கள் வெளியிடப்பட்ட 33 நிமிடத்தில் 2 லட்சத்து 79 ஆயிரம் டிக்கெட்டுகள் முன்பதிவு முடிந்து விட்டன. தினசரி 8 ஆயிரம் தரிசன டோக்கன்கள் என செப். 26-ஆம் தேதி முதல் அக். 31-ஆம் தேதி வரையிலான டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன. இதை முன்பதிவு செய்த பக்தா்கள் கட்டாயம் 2 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டதற்கான சான்றிதழ் அல்லது தரிசன தேதிக்கு 3 நாள்களுக்கு முன்னா் எடுத்த கரோனா பரிசோதனையின் நெகடிவ் முடிவுடன் வர வேண்டும். இந்த இரண்டில் ஒன்று கொண்டு வந்தால் மட்டுமே தரிசனத்துக்கு செல்ல பக்தா்கள்அனுமதிக்கப்படுவா். இதுவரை சீனிவாசத்தில் வழங்கி வந்த சா்வதரிசன டோக்கன்களை தேவஸ்தானம் முற்றிலும் நிறுத்தி விட்டது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com