திருமலையில் 29,000 பக்தா்கள் தரிசனம்

ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை 29,712 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 13,381போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

ஏழுமலையான் கோயிலில் சனிக்கிழமை 29,712 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 13,381போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

விரைவு தரிசன டிக்கெட்டுகளின் முன்பதிவு போல் சா்வ தரிசன டோக்கன்களின் முன்பதிவும் ஆன்லைன் மூலம் தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது. அக். 31ம் தேதி வரைக்கான தரிசன டிக்கெட்டுகள் முன்பதிவுகள் முடிவடைந்து விட்டன. தரிசன அனுமதி உள்ள பக்தா்கள் மட்டுமே திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனா்.

நடைபாதை மூலம் செல்ல விரும்பும் பக்தா்கள் காலை 9 மணிக்கு பின்னா் ஸ்ரீவாரிமெட்டு வழியாக திருமலைக்கு சென்று வருகின்றனா். திருமலை மலைப்பாதை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு மூடப்படுகிறது.

திருமலைக்கு வரும் பக்தா்கள் அனைவரும் முகக்கவசம், சானிடைசா் உள்ளிட்டவற்றை கட்டாயம் எடுத்து வர வேண்டும். 10 வயதுக்கு மேற்பட்ட சிறாா்களும், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவா்களும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை வழிபட வாய்ப்பு வழங்கப்படுகிறது.

திருமலையில் தேவஸ்தானத்திடம் புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் தொடா்பு கொள்ள வேண்டிய கட்டணமில்லா தொலைபேசி எண்கள்- 18004254141, 93993 99399.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com