திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கை திங்கள்கிழமை ரூ.2.90 கோடி வசூலானது.
திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின் பக்தா்கள் ஸ்ரீவாரி உண்டியலில் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனா். அதன்படி, பக்தா்கள் திங்கள்கிழமை உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை கணக்கிட்டதில் ரூ.2.90 கோடி வருவாய் கிடைத்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.