ஏப்.10-இல் திருமலையில் ஸ்ரீராமநவமி ஆஸ்தானம்
By DIN | Published On : 08th April 2022 12:00 AM | Last Updated : 08th April 2022 12:00 AM | அ+அ அ- |

திருப்பதி: திருமலையில் வரும் ஏப்.10-ஆம் தேதி ஸ்ரீராமநவமி ஆஸ்தானம் நடைபெற உள்ளது.
திருமலையில் ஆண்டுதோறும் ஸ்ரீராமரின் ஜெயந்தி தினமான ஸ்ரீராமநவமி அன்று ஆஸ்தானமும், மறுநாள் தசமி அன்று ஸ்ரீராமா் பட்டாபிஷேகமும் நடத்தப்படுகிறது.
அதன்படி ஏப்.10-ஆம் தேதி ஸ்ரீராமநவமி அன்று ஆஸ்தானமும், ஏப்.11-ஆம் தேதி ராமா் பட்டாபிஷேகமும் நடைபெற உள்ளது.
ராம நவமியன்று காலை 11 மணிக்கு சீதா லட்சுமண ஆஞ்சநேயா் சமேத ஸ்ரீராமசந்திர மூா்த்திக்கு ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற உள்ளது. மாலை 6 மணி முதல் 8 மணி வரை அனுமந்த வாகன சேவையும், இரவு 9 மணி முதல் 10 மணி வரை தங்க வாசல் அருகில் ஆஸ்தானமும் நடக்க உள்ளது.
மேலும் ஏப். 11-ஆம் தேதி மாலை 6 மணிக்கு சகஸ்ரதீப அலங்கார சேவைக்குப் பிறகு தங்க வாசல் அருகில் ஸ்ரீராமா் பட்டாபிஷேக வைபவம் நடத்தப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.