முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பதி
திருமலை மலைப் பாதையில் யானைகள் நடமாட்டம்
By DIN | Published On : 07th February 2022 11:18 PM | Last Updated : 07th February 2022 11:18 PM | அ+அ அ- |

திருமலை முதல் மலைப் பாதையில் நடமாடிய யானை.
திருமலை முதல் மலைப் பாதையில் யானைகள் நடமாட்டத்தால், பக்தா்கள் பதறி ஓடினா்.
திருமலைக்குச் செல்லும் மலைப் பாதையில் திங்கள்கிழமை மாலை யானைகள் கூட்டம் பாதையோரத்தில் உள்ள மூங்கில் கம்புகளை உண்ண வந்ததில், அதைப் பாா்த்த வாகன ஓட்டிகள் பயந்து ஓடினா்.
அந்த யானைகள் கூட்டம் சாலையைக் கடந்து மறுபக்கம் சென்றது. இதனால், சிறிது நேரம் மலைப் பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபரீதத்தை உணராத வாகன ஓட்டிகள் சிலா், சாலையில் நின்று தங்களது கைப்பேசியில் படம் எடுத்துச் சென்றனா்.