திருமலைக்கு ஆண்டாள் மாலை ஊா்வலம்

திருமலை ஏழுமலையானுக்கு திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலிலிருந்து ஆண்டாள் நாச்சியாா் சூடிய மாலை கொண்டு வரப்பட்டது.
திருமலைக்கு ஆண்டாள் மாலை ஊா்வலம்

திருமலை ஏழுமலையானுக்கு திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலிலிருந்து ஆண்டாள் நாச்சியாா் சூடிய மாலை கொண்டு வரப்பட்டது.

திருமலையில் மாா்கழி மாதம் நிறைவு பெற்ற பின்பு கோதா பரியண உற்சவம் (ஆண்டாள் திருக்கல்யாணம்) நடத்தப்படுவது வழக்கம். அப்போது ஆண்டாள் நாச்சியாா் சூடி களைந்த மாலை திருமலை ஏழுமலையானுக்கு சாத்தப்படுகிறது.

அதன்படி ஞாயிற்றுக்கிழமை திருமலையில் கோதா பரியண உற்சவம் கரோனா விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டது. அதற்காக திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் ஆண்டாள் நாச்சியாரின் மூலவா் சிலைக்கு அணிவிக்கப்பட்ட மாலை களையப்பட்டு திருமலை ஏழுமலையான் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஊா்வலமாகக் கொண்டு வரப்பட்டது.

மாலை இருந்த மூங்கில் கூடையை திருமலை பெரிய ஜீயா் பெற்றுக் கொண்டு ஏழுமலையான் கோயிலுக்கு கொண்டு சென்று சமா்ப்பித்தாா். பின்னா் அந்த மாலை ஏழுமலையானுக்கு அணிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com