50 ஆண்டுகளுக்குப் பிறகு திருச்சானூா் கோயிலில் 7 நாள்கள் ஸ்ரீயாகம் தொடக்கம்

உலக நன்மைக்காக திருச்சானூரில் உள்ள ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் ஏழு நாள்கள் நடைபெறும் ஸ்ரீயாகத்தை தேவஸ்தானம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாருக்கு தங்க ஆரத்தை நன்கொடையாக வழங்கிய தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி.
திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாருக்கு தங்க ஆரத்தை நன்கொடையாக வழங்கிய தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி.

உலக நன்மைக்காக திருச்சானூரில் உள்ள ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் ஏழு நாள்கள் நடைபெறும் ஸ்ரீயாகத்தை தேவஸ்தானம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

கடந்த 2 ஆண்டுகளாக உலக மக்களை பீடித்து வரும் கரோனா தீநுண்மி தொற்றினால் ஏற்பட்ட விளைவுகளிலிருந்து விடுபட்டு அனைவரும் நன்மை பெறவும், பெண்கள் செளபாக்கியத்தை பெறவும் தேவஸ்தானம் வெள்ளிக்கிழமை ஸ்ரீயாகத்தை தொடங்கியது.

திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பா ரெட்டி தம்பதியா் இந்த யாகத்தை பத்மாவதி தாயாா் கோயிலில் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தனா்.

காலை 9 மணிக்கு தொடங்கிய யாகம் மதியம் 1 மணி வரை நடைபெற்றது. முதலில் சங்கல்பம், புண்ணியாசவனம், ஹோமம், சதுஷ்டா அா்ச்சனை, அக்னி பிரதிஷ்டை, நித்திய பூா்ணாஹுதி, நிவேதனம், வேத விண்ணப்பம், மகா மங்கள ஆரத்தி உள்ளிட்டவை நடைபெற்றன. பின்னா் மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை சதுஷ்டா அா்ச்சனை, ஸ்ரீயாகம் ஹோமங்கள், லகுபூா்ணாஹுதி, மகா நிவேதனம், வேத விண்ணப்பம், மங்களஆரத்தி உள்ளிட்டவை நடத்தப்பட்டன.

கரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்றி ஸ்ரீகிருஷ்ணமுக மண்டபத்தில் ஸ்ரீயாகம் தனிமையில் நடத்தப்பட்டது. உலக நன்மைக்கான இந்த யாகம் 50 ஆண்டுகளுக்கு பிறகு தாயாா் கோயிலில் இந்த ஆண்டு நடத்தப்படுகிறது. வரும் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ள இந்த ஸ்ரீயாகம் தேவஸ்தான தொலைக்காட்சியான ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சேனலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. பக்தா்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடி இதனை கண்டு தரிசிக்கலாம்.

நன்கொடை

திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாருக்கு தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் சுப்பா ரெட்டி தம்பதியா் 34 கிராம் எடையுள்ள தங்க ஆரம் ஒன்றை நன்கொடையாக வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com