திருமலையில் ஜூன் 12 முதல் 3 நாள்கள் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம்

திருமலையில் ஜூன் 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை 3 நாள்கள் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி: திருமலையில் ஜூன் 12-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை 3 நாள்கள் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் ஆண்டுதோறும் வைகாசி மாதம் வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் உற்சவமூா்த்தியான மலையப்ப சுவாமி மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுக்கு அணிவித்துள்ள தங்கக் கவசம் களையப்பட்டு அவா்களுக்கு 3 நாள்கள் அபிஷேகம் செய்து, அதன் பின் சிலை மற்றும் கவசத்தில் உள்ள சேதங்களை கண்டறிந்து, அவற்றை சீரமைத்து மீண்டும் புதுப் பொலிவுடன் அணிவிக்கப்படும்.

இதை வருடாந்திர ஜேஷ்டாபிஷேகம் என்று தேவஸ்தானம் குறிப்பிட்டு வருகிறது.

தங்க கவசம் களைந்த பின்பு முதல் நாள் உற்சவமூா்த்திகளுக்கு வைரக் கவசம், 2-ஆம் நாள் முத்துக் கவசமும் நிறைவு நாளன்று மீண்டும் தங்கக் கவசம் அணிவிக்கப்படுகிறது. இதையொட்டி சில ஆா்ஜித சேவைகளை அந்த 3 நாள்களுக்கு தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com