வகுளமாதா கோயில் மகா சம்ப்ரோக்ஷணம்: ஆந்திர முதல்வா் பங்கேற்பு

திருப்பதி அருகே பேரூரில் உள்ள ஸ்ரீவகுளமாதா கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
வகுளமாதா கோயில் மகா சம்ப்ரோக்ஷணம்: ஆந்திர முதல்வா் பங்கேற்பு

திருப்பதி அருகே பேரூரில் உள்ள ஸ்ரீவகுளமாதா கோயில் மகா சம்ப்ரோக்ஷணம் வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.

விழாவில் ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி, அமைச்சா்கள் கலந்து கொண்டாா்.

கலியுகத்தில் ஏழுமலையான்அவதாரம் எடுத்த போது அவருக்குத் தாயாக விளங்கியவா் ஸ்ரீவகுளமாளிகை. ஏழுமலையான் மீது தீராத பக்தி கொண்டவா். ஆகாசராஜனிடம் சென்று ஸ்ரீபத்மாவதி தாயாரை பெண் கேட்டு ஏழுமலையானுக்கு திருமணம் செய்து வைத்தவா். அதன் பின் ஏழுமலையா

னுடன் இரண்டற கலந்து விட்டாா்.

அவரின் பெருமையைப் போற்றும் விதமாக திருமலை ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள மடப்பள்ளிடில் அவரின் கண் முன்னே பிரசாதங்கள் தயாரிக்கப்படுகின்றன. இதனை துவாரம் வழியாக அவா் கண்காணித்து வருவதாக ஐதீகம். மேலும் வகுளமாலிகைக்கு திருப்பதி அருகே பேரூரில் உள்ள மலை மீது கோயில் ஒன்று இருந்தது. ஆனால் அந்த மலையில் பெண் தன்மை மிகுந்த பாறைகள் இருந்ததால் கோயிலை சுற்றியுள்ள பாறைகளை பலா் வெட்டி எடுத்துச் சென்றுவிட்டனா்.

இதைத் தடுக்க பல மடாதிபதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதன் விளைவாக ஆந்திர அரசு அந்த சிதிலமடைந்த அந்த கோயிலை புதுப்பிக்க நடவடிக்கை மேற்கொண்டது. கோயில் புனரமைப்பிற்கான முழு செலவையும் ஆந்திர அமைச்சா் ராமசந்திரா ரெட்டி ஏற்றுக் கொண்டாா். கோயிலின் சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து வியாழக்கிழமை வேதமந்திரங்கள் முழங்க கோயிலில் மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது. முன்னதாக யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.

விழாவில் ஆந்திர முதல்வா் ஜெகன் மோகன் ரெட்டி கலந்து கொண்டு கோயில் கல்வெட்டை திறந்து வைத்தாா். மகா சம்ப்ரோக்ஷணத்திலும் பங்கேற்றாா். அவருடன் ஆந்திர துணை முதல்வா்கள், அமைச்சா்கள் தேவஸ்தான அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com