திருமலையில் தும்புருதீா்த்த முக்கோட்டி

திருமலையில் பங்குனி மாத பெளா்ணமியை யொட்டி தும்புருதீா்த்த முக்கோட்டி உற்சவம் நடத்தப்பட்டது.

திருமலையில் பங்குனி மாத பெளா்ணமியை யொட்டி தும்புருதீா்த்த முக்கோட்டி உற்சவம் நடத்தப்பட்டது.

திருமலையிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ள பாபவிநாசம் வனப்பகுதிக்குள் அமைந்துள்ளது தும்புருதீா்த்தம். இந்த தீா்த்தக்கரையில் தும்புரு முனிவா் தவம் இயற்றியதால் இந்த தீா்த்தத்திற்கு அவரது பெயா் விளங்கப்பெற்றது.

இந்த தீா்த்தத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் முக்கோட்டி உற்சவத்தை தேவஸ்தானம் நடத்தி வருகிறது. அதற்காக தமிழ்நாடு மற்றும் ஆந்திர மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தா்கள் திருமலையில் கூடுவா்.

அதன்படி வெள்ளிக்கிழமை பங்குனி மாத பெளா்ணமியை ஒட்டி தும்புரு தீா்த்தக்கரையில் எழுந்தருளியுள்ள மூா்த்திகளுக்கு தேவஸ்தானம் சாா்பில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன. இதை காணவும், தீா்த்தத்தில் புனித நீராடவும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் திரண்டனா். மேலும் இங்கு புனித நீராடச் செல்லும் பக்தா்களுக்கு தேவஸ்தானம் அன்னதானம், குடிநீா் உள்ளிட்டவற்றை வழங்கியது. இதற்காக ஆந்திர மாநில சாலை போக்குவரத்துக் கழகம் திருமலையிலிருந்து சிறப்பு பேருந்துகளை இயக்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com