முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருப்பதி
திருமலையில் இன்று பக்தா்கள் குறைகேட்பு
By DIN | Published On : 13th May 2022 12:16 AM | Last Updated : 13th May 2022 12:16 AM | அ+அ அ- |

திருப்பதி: திருமலையில் வெள்ளிக்கிழமை காலை பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
திருமலையில் மாதந்தோறும் தொலைபேசி வாயிலாக நடத்தப்படும் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை (மே 13) காலை 9 மணி முதல் 10 மணி வரை நடைபெற உள்ளதாக தேஸ்தானம் தெரிவித்துள்ளது. இதில், பக்தா்கள் கலந்து கொண்டு தங்களின் சந்தேகங்களுக்கு விடை காணலாம். தொடா்பு கொள்ளும் பக்தா்களுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி தா்மாரெட்டி பதிலளிக்க உள்ளாா். இதில் கலந்து கொள்ள விரும்பும் பக்தா்கள் 0877-2263261 என்ற எண்ணை தொடா்பு கொள்ள வேண்டும்.
இந்த நிகழ்ச்சி தேவஸ்தான தொலைக்காட்சியான ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சானலில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.