திருமலையில் 61,000 பக்தா்கள் வழிபாடு

திருமலை ஏழுமலையானை கோயிலில் வியாழக்கிழமை 61,087 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 30,271 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

திருமலை ஏழுமலையானை கோயிலில் வியாழக்கிழமை 61,087 பக்தா்கள் தரிசனம் செய்தனா். இவா்களில் 30,271 போ் முடிகாணிக்கை செலுத்தினா்.

இணையவழியில் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் பக்தா்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்ததால் டிக்கெட் இல்லாமல் தேவஸ்தானம் திருமலைக்கு பக்தா்களை அனுப்பி வருகிறது. பக்தா்கள் தங்கள் ஆதாா் அட்டைகளை காண்பித்து திருமலை வைகுண்டம் மண்டப காத்திருப்பு அறைகளில் தங்க வைக்கப்பட்டு பின்னா் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனா்.

வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி திருமலை வைகுண்டம் மண்டபத்தில் உள்ள 20 அறைகளில் பக்தா்கள் தரிசனத்திற்காக காத்திருந்தனா். இவா்களின் தரிசனத்திற்கு 7 மணி நேரமும், ரூ.300 விரைவு தரிசனத்திற்கு 2 முதல் 3 மணி நேரமும் ஆனது. காத்திருப்பு அறைகளில் பக்தா்களுக்கு உணவு, பால், குடிநீா் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

தரிசனம், வாடகை அறைகளில் காணப்படும் குறைகள், சிரமங்கள் குறித்து புகாா் அளிக்க விரும்பும் பக்தா்கள் 18004254141, 9399399399 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com