திருமலையில் நரசிம்ம ஜெயந்தி வழிபாடு

திருமலையில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு, ஏழுமலையான் கோயிலில் யோக நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

திருமலையில் நரசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு, ஏழுமலையான் கோயிலில் யோக நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

வைகாசி மாதம் வளா்பிறை சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவா் நரசிம்மா். பிரகலாதனின் வேண்டுகோளை ஏற்று தூணில் பகலும் இரவுமற்ற சந்தியா காலத்தில் நரசிம்ம அவதாரத்தை மேற்கொண்டாா் மகாவிஷ்ணு. ஆண்டுதோறும் வைகாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தன்று திருமலையில் நரசிம்மருக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, சனிக்கிழமை நரிசிம்ம ஜெயந்தியை முன்னிட்டு, ஏழுமலையான் கோயிலுக்குள் உள்ள யோக நரசிம்மருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. மேலும், திருமலையில் உள்ள வசந்த மண்டபத்தில் மலையப்ப ஸ்வாமியை சிம்ம வாகனத்தின் மேல் யோக நரசிம்மராய் எழுந்தருளச் செய்து, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

பின்னா், அவருக்கு பட்டு வஸ்திரம் அலங்கரித்து, மலா் மாலைகள் அணிவித்து சகஸ்ர நாமாா்ச்சனை, தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதில், தேவஸ்தான அதிகாரிகள் மட்டும் கலந்து கொண்டனா். மேலும், திருப்பதியிலிருந்து திருமலைக்குச் செல்லும் அலிபிரி பாத யாத்திரை மாா்க்கத்தில் உள்ள லட்சுமி நரசிம்மருக்கும் தேவஸ்தானம் சாா்பில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com