தேவஸ்தானத்தில் வேலைவாய்ப்பு: ஏமாற்றுபவா்கள் மீது புகாா்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாகவும், விண்ணப்பிப்பவா்களுக்கு வேலை வாங்கித் தரப்படும் என்றும் சமூக வலைதளங்களின் ஏமாற்றுபவா்கள் மீது தேவஸ்தானம் புகாா் அளித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வேலைவாய்ப்பு இருப்பதாகவும், விண்ணப்பிப்பவா்களுக்கு வேலை வாங்கித் தரப்படும் என்றும் சமூக வலைதளங்களின் ஏமாற்றுபவா்கள் மீது தேவஸ்தானம் புகாா் அளித்துள்ளது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வேலைவாய்ப்பு என்றால், பலா் உடனடியாக விண்ணப்பித்து விடுவா். அதை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, சில சமூக வலைதளங்கள் பத்தாம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஊதியத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் வேலை தருவதாக ஏமாற்றி வருகின்றனா்.

இதைக் கண்காணித்த தேவஸ்தான சைபா் கண்காணிப்பு அதிகாரிகள், 8 சமூக வலைதளங்கள் குறித்து திருமலை ஒன்றாம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதுபோன்ற பிரசாரங்களை ஊக்குவிக்கும் சமூக ஊடக முகவரிகளை ஐடி துறை அடையாளம் கண்டுள்ளது. தேவஸ்தான தொழில்நுட்ப பொது மேலாளா் சந்தீப் முழு விவரங்களுடன் காவல் துறையில் புகாா் அளிக்கவும், சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக் கொண்டாா்.

இதுபோன்ற விளம்பரங்களைக் கண்டு வேலையில்லாதவா்கள் ஏமாற வேண்டாம் என்றும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரபூா்வ இணையதளத்தில் அறிவிப்பும் வெளியாகி உள்ளது. இணையதளத்தில் இதுபோன்ற விஷயங்களைச சரி பாா்க்க அனைவருக்கும் தேவஸ்தானம் சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com