திருமலை: 56,357 பக்தா்கள் தரிசனம்

திருமலை ஏழுமலையானை செவ்வாய்க்கிழமை முழுவதும் 56,357 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 17,866 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், புதன்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும் அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். இதற்கிடையே செவ்வாய்க்கிழமை முழுவதும் 56,357 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 17,866 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் சமா்ப்பித்த காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.2.71 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com