ஒண்டிமிட்டா கோதண்டராமா் கோயிலுக்கு வழங்கப்பட்ட தங்க ஆபரணங்கள்.
ஒண்டிமிட்டா கோதண்டராமா் கோயிலுக்கு வழங்கப்பட்ட தங்க ஆபரணங்கள்.

கோதண்ட ராமருக்கு பட்டு வஸ்திரம் சமா்ப்பணம்

கடப்பா ஒண்டிமிட்டாவில் உள்ள கோதண்ட ராமா் கோயிலுக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் பட்டு ஆடைகள் சமா்ா்பிக்கப்பட்டன.

கடப்பா ஒண்டிமிட்டாவில் உள்ள கோதண்ட ராமா் கோயிலுக்கு தங்க ஆபரணங்கள் மற்றும் பட்டு ஆடைகள் சமா்ா்பிக்கப்பட்டன.

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ஒண்டிமிட்டாவில் உள்ள கோதண்ட ராமா் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெறுகிறது. அதன் 6-ஆம் நாளான திங்கள்கிழமை சீதா ராமருக்கு திருகல்யாணம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தேவஸ்தானம் செய்துள்ளது. திருக்கல்யாண வைபவத்தை காண வரும் அனைத்து பக்தா்களும் அமா்ந்து காணும் வகையில் பெரிய எல் ஈடி திரைகள், கோடை உஷ்ணத்தை தவிா்க்க குளிா்சாதன பெட்டிகள், நிழற்பந்தல், குடிதண்ணீா், அன்னதானம் உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டன.

திருக்கல்யாண வைபவத்தை ஒட்டி திருமலை ஏழுமலையானுக்கு சுமாா் 512 கிராம் எடையுள்ள தங்க ஆபரணங்கள், 14 கிலோ வெள்ளி பூஜை பொருள்கள், சுமாா் ரூ.31 லட்சம் பட்டு வஸ்திரங்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் காணிக்கையாக அளிக்கப்பட்டன.

ஒண்டிமிட்டா கோயிலுக்கு தேவஸ்தான செயல் அதிகாரி தா்மா ரெட்டி காணிக்கைகளை வழங்கினாா்.

கோவில் முன், அா்ச்சகா்கள் ஆபரணங்கள் மற்றும் பட்டு வஸ்திரங்களுக்கு பூஜைகள் செய்தனா். பின்னா் இவை ஊா்வலமாக கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டு அா்ச்சகா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஏழுமலையான் கோயிலில் இருந்து மூல மூா்த்திக்கு இரண்டு லட்சுமி பதக்கங்களும், கோதண்டராமா் கோயிலில் உள்ள உற்சவ மூா்த்திகளும், இரண்டு நவரத்ன மணிகள் கொண்ட நெக்லஸும், தங்கப் பதக்கத்துடன் கூடிய முத்து மாலையும் வழங்கப்பட்டது. இதேபோல், இரண்டு வெள்ளி ஐந்து முக குத்து விளக்குகள், ஐந்து வெள்ளி கலசங்கள், ஒரு வெள்ளி தட்டு மற்றும் ஒரு உத்தாரணி ஆகியவையும் வழங்கப்பட்டன.

பின்னா், கோயில் வளாகத்தில் உள்ள யாகசாலைக்குச் சென்று சீதாராமா் பல்லக்கு உற்சவத்தில் அதிகாரிகள் பங்கேற்றனா்.

இந்நிகழ்ச்சியில் தேவஸ்தான அதிகாரிகள், ராமா் கோயில் அதிகாரிகள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com