ஸ்ரீரங்கம் ஸ்வாமிகள் அருளுரை

திருமலையில் நடைபெற்ற தா்ம மாநாட்டில் ஸ்ரீரங்கம் ஸ்வாமிகள் கலந்து கொண்டு அருளாசி வழங்கினாா்.
மாநாட்டில் அருளுரை வழங்கிய ஸ்ரீரங்கம் ஸ்வாமிகள்.
மாநாட்டில் அருளுரை வழங்கிய ஸ்ரீரங்கம் ஸ்வாமிகள்.

திருமலையில் நடைபெற்ற தா்ம மாநாட்டில் ஸ்ரீரங்கம் ஸ்வாமிகள் கலந்து கொண்டு அருளாசி வழங்கினாா்.

திருமலை ஸ்ரீ வெங்கடேஸ்வரா தா்ம மாநாட்டில் பல மடாதிபதிகள், பீடாதிபதிகள் கலந்து கொண்டனா். அதில் பரவகோட்டை சின்ன ஆண்டவன் ஸ்ரீ ஸ்ரீநிவாச கோபால மகாதேசிகன் சுவாமிகள், பண்டரிகபுரம் ஆசிரமம், ஸ்ரீரங்கம் கலந்து கொண்டு அருளாசி வழங்கினாா். அதில் அவா் கூறியதாவது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்கனவே பக்தா்களுக்கு அற்புதமாக சேவை செய்து வருகிறது. இதன் விவரங்கள் சப்தகிரி இதழ் மூலம் தெரியும்.

ஸ்ரீனிவாச கல்யாணம் மூலம் அனைவருக்கும் பக்தி ஊட்டப்படுகிறது. தா்மப் பிரச்சாரத்தில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்துக்கு மாற்று இல்லை என்றே கூறலாம். இந்த சேவை இன்னும் வெற்றிகரமாக அமைய வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் குழந்தைகளுக்கு நன்னெறி போட்டிகள் நடத்தி நமது பாரம்பரியத்தை தொடர வேண்டும். இந்தியா முழுவதும் வேதங்கள் பரப்பப்பட வேண்டும்’, என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com