திருமலை: 70,679 போ் தரிசனம்

திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 70,679 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 21,717 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

திருமலை ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 70,679 பக்தா்கள் தரிசனம் செய்தனா். 21,717 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

திருமலைக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை தற்போது குறைந்துள்ள நிலையில், திங்கள்கிழமை தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 8 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

அலிபிரி நடைபாதை வழியாக மதியம் 2 மணிவரை 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், பக்தா்களும் அவா்களின் பெற்றோா்களும், இரவு 10 மணிவரை அனைத்து பக்தா்களும் அனுமதிக்கப்படுகின்றனா். இதற்கிடையே, ஞாயிற்றுக்கிழமை முழுவதும் 70,679 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 21,717 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

பக்தா்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.36 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com