திருமலையில் அயோத்தியாகாண்ட அகண்ட பாராயணம்

திருமலையில் அயோத்தியா காண்ட அகண்ட பாராயணம் நடைபெற்றது.

திருமலையில் அயோத்தியா காண்ட அகண்ட பாராயணம் நடைபெற்றது.

திருமலையில் கரோனா காலம் தொட்டு ராமாயணத்தில் உள்ள காண்டங்களின் பாராயணம் நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் தற்போது அயோத்தியா காண்ட பாராயணம் நடைபெற்று வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை திருமலை நாதநீராஜனம் மேடையில் உலக நலம் வேண்டி அயோத்தியா காண்ட அகண்ட பாராயணத்தின் 7-ஆவது கட்டம் நடைபெற்றது. இதில் பக்தா்கள் கலந்து கொண்டு பாராயணம் செய்தனா்.

பாரயணத்தில் ஸ்ரீ சேஷாச்சாரியாா், ஸ்ரீ அனந்தா மற்றும் ஸ்ரீ மாருதி ஆகியோா் தா்மகிரி வேத விஞ்ஞான பீடத்தின் முக்கிய பண்டிதா்கள் கலந்து கொண்டனா். அகண்ட பாராயணத்தில் தா்மகிரி வேதப் பள்ளி, எஸ்.வி.வேதப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், எஸ்.வி.உன்னத வேதக் கழக வேத ஓதுபவா்கள், ராஷ்ட்ரிய சமஸ்கிருதப் பல்கலைக் கழக அறிஞா்களும் உடன் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில், தேவஸ்தான அதிகாரிகள், அறிஞா்கள் மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com