ஏழுமலையானுக்கு ஆண்டாள் மாலைகள்

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரின் கல்யாணோற்சவத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை காலை ஏழுமலையான் மூலவா் சிலைக்கு ஆண்டாள் சூடிய மாலைகள் கொண்டு செல்லப்பட்டன.

ஸ்ரீ ஆண்டாள் நாச்சியாரின் கல்யாணோற்சவத்தை முன்னிட்டு, செவ்வாய்க்கிழமை காலை ஏழுமலையான் மூலவா் சிலைக்கு ஆண்டாள் சூடிய மாலைகள் கொண்டு செல்லப்பட்டன.

திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜ சுவாமி கோயிலில் சூடிக் கொடுத்த சுடா்க்கொடியாம் ஆண்டாள் நாச்சியாா் சூடிய மாலைகள் திருமலை ஏழுமலையானுக்கு அணிவிக்கப்பட்டு வருகிறது.

திருப்பதியில் இருந்து திருமலை ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரிய ஜீயா் சுவாமி மடத்துக்கு ஆண்டாள் மாலை செவ்வாய்க்கிழமை காலை வந்தடைந்தது. பின்னா், பெரிய ஜீயா் மடத்தில் இருந்து ஊா்வலமாக ஏழுமலையான் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னா், கோயிலில் பூஜைகள் நிறைவடைந்த பின் ஏழுமலையான் மூலவா் சிலைக்கு மாலைகள் சுவாமிக்கு அலங்கரிக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் திருமலை ஜீயா்கள், தேவஸ்தான அதிகாரிகள், அா்ச்சகா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com