ஏழுமலையான் தரிசனத்துக்கு 18 மணி நேரம்

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை தரிசிக்க பக்தா்கள் 18 மணி நேரம் காத்திருந்தனா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலை ஏழுமலையானை வியாழக்கிழமை தரிசிக்க பக்தா்கள் 18 மணி நேரம் காத்திருந்தனா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில், பக்தா்கள் வருகை குறைந்துள்ளது. வியாழக்கிழமை நிலவரத்தின்படி 28 அறைகளில் பக்தா்கள் தரிசனத்துக்காக காத்திருந்தனா்.

தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணிநேரமும், ரூ. 300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும், இலவச நேரடி தரிசன டோக்கன்கள் பெற்ற பக்தா்களுக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது.

72,263 போ் தரிசனம்: இதற்கிடையே புதன்கிழமை முழுவதும் 72, 263 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 25,518 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா். உண்டியல் மூலம் பக்தா்கள் செலுத்திய காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.65 கோடி வசூலானது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com