திருமலையில் குடியரசு தின விழா

திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாகக்க் கட்டடத்தில் 75-ஆவது குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிா்வாகக்க் கட்டடத்தில் 75-ஆவது குடியரசு தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

செயல் அதிகாரி தா்ம ரெட்டி தேசியக் கொடியை ஏற்றி வைத்தாா்.

இந்த நிகழ்ச்சிக்கு அறங்காவலா் குழு தலைவா் கருணாகா் ரெட்டி தலைமை வகித்தாா். இதையொட்டி, தேவஸ்தான பாதுகாப்பு அதிகாரிகளின் அணிவகுப்பு சிறப்பாக நடைபெற்றது. கண்காணிப்பு அதிகாரி சதீஷ்குமாா் அணிவகுப்வை வழிநடத்தினாா். அதன்பின், பல்வேறு துறைகளைச் சோ்ந்த 39 அதிகாரிகள், 264 பணியாளா்கள், சிம்ஸ் மருத்துவமனை ஊழியா்கள் 2 போ், எஸ்விபிசி ஊழியா்கள் 7 பேருக்கு 5 கிராம் ஸ்ரீவாரி வெள்ளி டாலா் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது., எஸ்.வி.இசை மற்றும் நாட்டியக் கல்லூரி மாணவா்களின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.

மோப்ப நாய் படை பொறுப்பாளா் ரமணா மேற்பாா்வையில் ஒத்திகை, வெடிமருந்துகள் மற்றும் போதைப் பொருள்களை கண்டறிதல், அமைதியான பயிற்சி, தீ தாண்டுதல், பொருள்களை கவனமாகப் பாதுகாத்தல், தப்பியோடிய சமூக விரோதிகளை கண்டறிந்து கைது செய்தல் போன்ற செயல்விளக்கங்களை அளித்தனா். இந்நிகழ்ச்சியில், தேவஸ்தான அதிகாரிகள் அனைவரும் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com